Date:

இலங்கையின் திட்டத்திற்கு ஐ.எம்.எஃப் அனுமதி

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் 48 மாத நீடிக்கப்பட்ட ஏற்பாட்டிற்கு IMF நிறைவேற்றுக் குழு அனுமதி அளித்துள்ளதாக, IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும்.

அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது.

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் வைத்தியசாலையில்

அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த...

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

தென்னிந்தியா நடிகரும், தே.மு.தி.க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன்...

இலங்கையில் முதன்முறையாக காரசாரமான கொரியன் ராமேனை அறிமுகப்படுத்தும் Prima kottumee

இலங்கை முழுவதிலும் காரசார சுவையினை விரும்பும் அனைவரையும் உற்சாகப்படுத்த Prima kottumee ...

BREAKING லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ...