Date:

இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையின் முக்கிய புள்ளி காஷ்மீர்

அமெரிக்க புலனாய்வு சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் படி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்த பதட்டங்கள் இருநாடுகளுக்கு இடையில் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையின் படி இந்த மோதலுக்கு முக்கிய புள்ளியாக சர்ச்சைக்குரிய காஷ்மீர் பள்ளத்தாக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட 40 பக்க புலனாய்வு அறிக்கை தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கருத்துகளை வௌியிட்டிருந்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் அர்த்தமுள்ள உரையாடலை அமெரிக்கா ஆதரிக்கிறது. அந்த உரையாடலின் தன்மை குறித்து புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் முடிவு செய்ய வேண்டும்.

இந்தியா – பாகிஸ்தான் ஒப்புக்கொண்டால் அமெரிக்கா தனது பங்கை வகிக்க தயாராக உள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

ஏனென்றால் இவை நாடுகளுக்கான முடிவுகள். அவர்கள் அமெரிக்காவிற்கான ஒரு குறிப்பிட்ட பங்கை ஏற்றுக்கொண்டால், இரு நாடுகளுக்கும் ஒரு பங்காளியாக, அந்த செயல்முறையை அமெரிக்கா பொறுப்புடன் ஆதரிக்கும் என்றார்.

பாகிஸ்தானும் இந்தியாவும் உங்களுடைய பங்காளிகள், எனவே நீங்கள் ஏன் மத்தியஸ்தம் செய்யக்கூடாது? என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

இறுதியில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று ஈடுபடுத்தும் முறைகளையோ அல்லது வழியையோ தீர்மானிப்பது அமெரிக்காவல்ல. நாங்கள் ஆதரிப்பது ஆக்கபூர்வமான உரையாடல்களை மாத்திரமே. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அர்த்தமுள்ள இராஜதந்திரம், நீண்டகால மோதல்களைத் தீர்ப்பதற்கான முதல் நிகழ்வாகலாம் என்றார்.

அமெரிக்கா, ஆக்கபூர்வமான உரையாடலை ஆதரிக்கிறது. நாங்கள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மற்றொரு நீண்டகால மோதல்களைத் தீர்ப்பதற்கு இராஜதந்திரத்தை ஆதரிக்கிறோம்.

நாங்கள் ஒரு பங்குதாரர். அந்த செயல்முறையை அவர்கள் பொருத்தமானதாகக் கருதும் விதத்தில் நாங்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் இறுதியில், இவை இந்தியாவும் பாகிஸ்தானும் தாங்களாகவே தீர்மானிக்க வேண்டிய விடயங்களாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவின் புதிய சுங்கக் கொள்கைக்கு இலங்கை ஆடைத் தொழிற்துறை எதிர்ப்பு

அமெரிக்கா அண்மையில் அறிவித்த புதிய சுங்க வரி கொள்கை தொடர்பாக இலங்கையின்...

இளைஞர்களின் அரசியல் நாட்டிற்கு தேவை – தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர்

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பானது,...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும்...

யோஷித மற்றும் டெய்சியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

  யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373