Date:

ஸ்ரீநகர்-ஜம்மு பிரதான வீதி அடிக்கடி மூடப்படுவதால் ஜம்மு – கஷ்மீர் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பாரிய சவால்

ஸ்ரீநகர்-ஜம்மு பிரதான வீதி அடிக்கடி மூடப்படுவதால் ஜம்மு – கஷ்மீர் வர்த்தகர்கள் நஷ்டத்தை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரிகளால் அடிக்கடி ஸ்ரீநகர்-ஜம்மு பிரதான வீதி மூடப்படுவதால், வியாபாரிகள், பழ உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட வர்தகர்கள் பாரிய நஷ்டத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜம்மு – கஷ்மீருக்கும் சர்வதேசத்திற்கும் இடையிலான ஒரே இணைப்பு பாலமாக இருப்பது குறித்த வீதி என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீதி மூடப்படுவதால் ரம்பானின் மெஹர் மற்றும் பந்தியல் பகுதிகளில் பழங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

கடந்த 2020 செப்டம்பரில் பல நாட்களாக பிரதான வீதி மூடப்பட்டதால் ஏராளமான லொரிகள் செல்ல முடியாமல் இருந்தமை காரணமாக டொன் கணக்கில் ஆப்பிள்கள் பழுதடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து சோபியானைச் சேர்ந்த ஆப்பிள் வியாபாரி மீர் முஹம்மத் அமீன் கருத்து தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு வீதிகள் அடிக்கடி மூடப்பட்டதால் பாரிய வியாபார பாதிப்பு ஏற்பட்டது. ஆப்பிள் விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரிய வருமானம் கிடைக்காததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா...

சன்னஸ்கலவுக்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில்...

பால் தேநீர் விலை

பால் தேநீர் ஒன்றினை 80 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு தேசிய நுகர்வோர்...

ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி...