Date:

தனிமையிலிருந்த யுவதி கொலை: சிப்பாய் கைது

தனது  வீட்டில் தனிமையில் இருந்த 26 வயதுடைய யுவதியொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் சேற்றுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மற்றும் அயலவர்கள் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

கண்டி, அலவத்துகொட பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட விலான பல்லேகம எல்லேகடே  என்ற பிரதேசத்தில் வசித்து வந்த  தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த யுவதி திருமணமாகி பிள்ளைகள் இல்லாத நிலையில் கணவருடன் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 10ஆம் திகதி இரவு கிராமத்தில் உள்ள மரண வீடொன்றுக்கு கணவர் சென்றிருந்துள்ளதுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த பின் மனைவியைக் காணவில்லை என்று அவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்..

அதன் பின்னர், அனைவரும் இந்த இளம் பெண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிய நிலையில் அவரது சடலம் வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வயலில்  சேற்றில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று இரவு 9.30 மணியளவில் அலறல் சத்தம் ஒன்று கேட்டதாகவும், கதவைத் திறந்து பார்த்தபோது சத்தம் கேட்கவில்லை என்றும் அயலவர்கள்  கூறுகின்றனர்.

சடலம் இருந்த இடத்திலிருந்து மோப்ப நாய்ப் பிரிவின் நாய் ஒன்று விடுவிக்கப்பட்டதையடுத்து, அந்த நாய் சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் சுற்றி  வீடொன்றுக்கு சென்றுள்ளதுடன் அவ் வீட்டில் வசிக்கும்   இராணுவ சிப்பாய்  ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோப்பநாயைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த நாய், இராணுவ சிப்பாயின் வீட்டுக்குள் சென்று, சிப்பாயின் அறையில் நின்றுகொண்டது. அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த யுவதியிடம்  இராணுவ சிப்பாய் பல்வேறு கோரிக்கைகளை முன்​வைத்துள்ளார் என்பதும் அதனை அந்த யுவதி நிராகரித்துள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...