மேல், மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையதினம் (13) வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், ஞாயிற்றுக்கிழமை (12) அறிவித்தது.
அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட மாட்டாது என்று செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே உறுதியளித்தார்.