அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக என்ற நிலையை அடைந்ததால், எதிர்காலத்தில் பாணின் விலை மேலும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார்.
மேலும், சரியான எடை இல்லாத பாணினை கொள்வனவு செய்வதனை தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பாணின் எடை மற்றும் தரம் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவத்துள்ளார்.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைவடையும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.