Date:

நுவரெலியா மருத்துவமனையில் 23 பேருக்கு கொரோனா!

நுவரெலியா பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

மருத்துவர்கள் 3 பேர், தாதியர்கள் 13, கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் 7 பேர் என மொத்தமாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட கனிஷ்ட ஊழியர்கள் சிலர் மருத்துவமனையின் கொரோனா வாரட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த அறிகுறிகள் உள்ள சிலர் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், எவ்வாறாயினும் தற்போதுள்ள மருத்துவர்கள், தாதியர்களைக் கொண்டு பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

15,000 மண்சரிவு அபாயம் | 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றம்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள...

ஐந்தில் ஒரு பங்கு நீரால் மூழ்கிய இலங்கை!

25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக...

பேரிடரினால் உயிரிழப்புக்கள் பதிவு செய்யும் சட்டம்!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண் சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களை பதிவு...

3 மாகாணங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குப் பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை...