கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த அறிவிப்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டிற்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன்,
சந்தேக நபர் பல்வேறு கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பித்த சந்தேக நபருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.