துருக்கியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 7.5 மெக்னிடியூட் அளவில் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5300 பேர் காயமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.