Date:

நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லையா நாளை

நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லை தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இன்னுமின்னும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 செயலணி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடும். அந்த வகையில், நாளைக்கும் அந்த செயலணி கூடவுள்ளது.

இதன்​போது சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமையவே, அடுத்தக்கட்டத் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.

ஆகக் குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிகட்சிகளில் பத்து கட்சிகள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன.

இந்நிலையில், கொரோனாத் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்குமாறு மற்றுமொரு பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இன்றையதினம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பஸ் கட்டண குறைப்பு இடைநிறுத்தம்

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இன்று அமலுக்கு வரவிருந்த 2.5% பஸ்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே (82)  காலமானதாக குடும்ப வட்டாரங்கள் திங்கள்கிழமை...

எரிபொருள் விலை அதிகரிப்பு;விலைப்பட்டியல்

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் எரிபொருள் விலைகளை...

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும், தெரு நாடகம் நடத்தி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு...