Date:

பெற்றோல் விலை அதிகரிப்பு- முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பாக அறிவிப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் ஒக்டேன் 92 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை ரூ. 30 இனால் ரூ. 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கட்டணங்களை அதிகரிப்பதில்லை என தமது சங்கம் முடிவெடுத்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெற்றோலின் விலை அதிகரிக்கும் போதோ அல்லது குறைக்கப்படும்போதோ அது முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர், விலை திருத்தம் காரணமாக பயணிகளும், முச்சக்கரவண்டி சாரதிகளும் கட்டணங்கள் தொடர்பில் குழப்பமடைவதாக சுட்டிக்காட்டினார்.

முச்சக்கர வண்டிகள் மற்றும் அதன் கட்டணங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில், தாங்கள் தங்களது சேவைகளை வழங்கி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில்...