Date:

மைத்திரிக்காக கொழும்பில் உண்டியல் குலுக்கி பிச்சை எடுத்த நபர் (photos)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டுமென  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  அதற்கான பணத்தை சேகரிக்கும் வகையில்   கலைஞர் சுதத்த திலகசிறி நேற்று (17) கொழும்பு கோட்டையில் உண்டியல் குலுக்கி  பண சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதன்போது திரட்டப்பட்ட 1,810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் கையளிக்க தேவையான ஏற்பாடுகளை  குறித்த கலைஞர்  முன்னெடுத்துள்ளார்.

நீதிமன்றத்தினால்  உத்தரவிடப்பட்ட  10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்துமளவுக்கு  தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த பணம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம்  கலைஞர் சுதத்த திலகசிறி நேரில் சென்று தான் எடுத்த பணத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல்...