தலவாக்கலை – மிடில்டன் பெருந்தோட்டப் பகுதியிலுள்ள லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக எமது சேய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தீயினால் சுமார் 10 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன.
பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






