Date:

பெட்டா காஸ்மெட்டிக் அசோசியேஷன் நடாத்தும் உள்ளக கிரிக்கெட், காற்பந்தாட்ட போட்டிகள் (photos)

பெட்டா காஸ்மெட்டிக் அசோசியேஷன் மூன்றாவது தடவையாகவும் நடாத்தும் உள்ளக கிரிக்கெட் மற்றும் காற்பந்தாட்ட போட்டிகள் 2023.

மூன்றாவது தடவையாகவும் பெட்டா காஸ்மெட்டிக் அசோசியேசன் நடத்தும் உள்ளக கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளுக்கான சீருடை அறிமுக விழா நேற்றைய தினம்(05.01.2023) கொழும்பு 14 கிங்ஸ் களம்போ ஹோட்டலில் மிக சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டிருந்ததோடு சிறப்பு அதிதியாக மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வுக்கான பூரண அனுசரணையினை பெட்டா கொஸ்மடிக் அசோசியேஷன் உறுப்பினர்களும் அதன் தலைவர் செயலாளர் மற்றும் உப தலைவர் ஆகியோர் மேற்கொண்டு இருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சீருடைகள் மற்றும் வெற்றிக்கோப்பைகள் வெற்றி கிண்ணத்தை அறிமுகப்படுத்தி பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள், ஒற்றுமையே எங்கள் பலம், விளையாட்டின் மூலமாக இந்த ஒற்றுமையை மேம்படுத்தி நாட்டையும் நமது சமூகத்தையும் நாங்கள் வளம் பெறச் செய்யலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அத்துடன் இந்நிகழ்வின் இறுதியில் அனைத்து அணியினரின் சீருடை அறிமுகமும் போட்டித்தேர்வு சீட்டிழுப்பும் நடைபெற்ற தோடு தேர்வு செய்யப்பட்ட அணியினர் ஞாயிற்றுக்கிழமை(08.01.2023) வெஹெரஹர கிளப் பியூஸன் உள்ளக விளையாட்டரங்கில் பலப்பரீட்சை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் மொஹமட் நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...