எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாடு முழுவதும் தினமும் இரவு 10.00 மணி தொடக்கம், அதிகாலை 04.00 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ‘டெல்டா’ வைரஸ் பரவல் காரணமாக நாளாந்தம் 160 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகிவரும் பின்னணியில் இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதி நாட்களிலும் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பிலேயே அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தலும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வர்ததமானியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கோருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.