Date:

காவி நிறம் இந்துக்களுக்கு பச்சை நிறம் முஸ்லீம்களுக்கு சொந்தமானதா?

காவி நிறம் இந்துக்களுக்கு சொந்தமாவையா? பச்சை நிறம் முஸ்லீம்களுக்கு சொந்தமானதாவையா? என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ திரைப்பட சர்ச்சை குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர்முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

A file photo of NC president Farooq Abdullah (PTI)

காவி நிறம் இந்துக்களுக்கு சொந்தமானதா? என்று தேசிய மாநாட்டில் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று வெள்ளிக்கிழமை (23) கேள்வி எழுப்பினார்.

மேலும், கருத்து தெரிவித்த அவர் “ காவிநிறம் இந்துக்களுக்குச் சொந்தமானது, பச்சை முஸ்லீம்களுக்குச் சொந்தமானது என்று அர்த்தமா? இது என்ன? பசு இந்துக்களுக்குச் சொந்தமா, எருது முஸ்லீம்களுடையதா?” மேலும் கேள்வி எழுப்பினர்.

பதான் படத்தில் ‘பேஷாரம் ரங்’ பாடலில் காவி உடைகள் பயன்படுத்தியுள்ளதால் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கோபமடைந்ததை அடுத்து சர்ச்சை ஏற்பட்டது.

மேலும் குறித்த படத்தில் உள்ள சில காட்கள் படத்திலுருந்து நீக்கவிட்டால் மத்தியப் பிரதேசத்தில் படத்தைத் தடை செய்யப் போவதாக தெரிவித்தார்.

மேலும், வலதுசாரி அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) தீபிகா படுகோனின் காவி உடை மற்றும் பாடலில் உள்ள சில காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பாடல் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்திய குழுவினர், திரைப்பட காட்சி மற்றும் பாடலில் உடனடியாக மாற்றங்கள் கோரினர்.

மேலும் பாடலில் காவி நிறம் பயன்படுத்தியதை தொடர்ந்து மும்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அழிக்கப்பட்டுள்ளது.

மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காவி நிறத்தை வேண்டுமென்றே பயன்படுத்தியதாக தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தீபிகா படுகோன் மீது இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Source – https://www.indiatoday.in/india/story/farooq-abdullah-pathaan-movie-besharam-rang-controversy-saffron-colour-belongs-to-hindus-2312780-2022-12-23

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை தட்டிப்பறித்த சிங்கக் குட்டிகள்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்...

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...