குளிர் காலநிலையினால் உறுதி செய்யப்படாத நோயினால் கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இறைச்சி முத்திரை இருந்தால் மாத்திரம் இறைச்சியை கொள்வனவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் கடும் குளிரால் உயிரிழந்ததாக கூறப்படும் விலங்குகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.