ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் ஏனைய பிரதான பதவிகளுக்கான உறுப்பினர்கள் கட்சியின் யாப்பில் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கமைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பெயரிடப்பட்டனர்.
கொழும்பு – கெம்பல் மைதானத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது கட்சி சம்மேளனத்தின்போதே இவ்வாறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.