நாளைய தினம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் இன்று பிற்பகல் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இன்று அது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பார் என தெரிவித்தார்.
மோசமான வானிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அரசு பாடசாலைகளுக்கும் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.