Date:

ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தை தலிபான் படையினர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இன்று காலை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் மட்டுமே அரசின் கைவசம் இருந்தது.

ஆனால் தற்போது தலிபான் அந்த அதிகாரத்தையும் கைப்பற்றியதை அடுத்து இடைக்கால தலைவராக அலி அகமது ஜலாலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசே தலிபான்களிடம் ஆட்சியை விட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றி இருப்பது மற்ற நாடுகளின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறது.

தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதால் அமெரிக்கர்களை அந்நாட்டு ராணுவம் மீட்டுவருகிறது.

முந்தைய ஆட்சி கொண்டுவந்த சர்வதேச ஒப்பந்தங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் , பொருளாதாரத் தடைகள் போன்றவற்றை புதிய அரசு எப்படி மேற்கொள்ளப்போகிறது என்பது பற்றியும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் உள்நாட்டு பிரச்னைகளால் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மனித உரிமை பிரச்னைகள் போன்றவற்றையும் எப்படி கையாளப்போகிறது என்பது பற்றியும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் உலக நாடுகள் இந்த அரசை அங்கீகரிப்பார்களா என்பது குறித்த கேள்வியும் எழுந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்...

தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில்...

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருக்கும் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள்...

இலங்கையில் பணிபுரியும் பெண்களை தாக்கும் ஆபத்து

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய்...