கர்நாடக முன்னாள் முதல்வர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் இதுவரை வெளியான விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான வாழ்கைவரலாறு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று தயாராக உள்ளது.
தற்போது சித்தராமையாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை பான் இந்தியா அளவில் எடுக்க திட்டமிட்டுள்ள படக்குழு, நடிகர் விஜய் சேதுபதியை சித்தராமையா கேரக்டரில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளதால் அவரை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தால் பொறுத்தமாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.