Date:

உயிர்த்த ஞாயிறு சந்தேக நபரின் கொலையை விசாரிக்க 3 பொலிஸ் குழுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்காக பின்னர் விடுவிக்கப்பட்ட மொஹமட் பரஹதம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டமைக்கான உண்மைகளை கண்டறிய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த நபரை வெட்டிய நபர்கள் மற்றும் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய வாகனம் போன்றவற்றை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் இந்த விசாரணைகளின் போது மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜா-எல பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது உயிரிழந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவருடன் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, 2 டெட்டனேட்டர்கள், 1 கிலோ அமோனியா, 2 ஜெலக்னைட் மற்றும் இராணுவ சீருடைக்கு நிகரான இரண்டு சீருடைகள் ஆகியவற்றை குழுவினர் கண்டுபிடித்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று தமக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என குற்றம் சுமத்தப்பட்ட ஐவரில் மூவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட மூவரில் உயிரிழந்தவர் ஒருவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பணமோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் 28ஆம் திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் ஆஜராகியிருந்தார்.

இதனையடுத்து விசாரணை முடிந்த பின்னர் தனது காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்.
அவர் ஓட்டிச் சென்ற காருக்குப் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முன்பக்க காரை  நோக்கித் திருப்பி மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து என்னவென்று பார்ப்பதற்காக முன்பக்க காரில் இருந்தவர் காரை விட்டு இறங்கியதுடன் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, மட்டக்குளி பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட்ட பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ஹனான் அமின்

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட் திறமைகளை வெளிக்காட்டிய பாராளுமன்ற உத்தியோகத்தர்களினது பிள்ளைகளைக் கௌரவித்து புலமைப்பரிசில் மற்றும்...

ஹரிணி சீனாவுக்கு…

பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க...

மீண்டும் இலங்கையில் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

இன்று கடையடைப்பு! யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை..

வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று...