இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் நேற்று (29) மாலை கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நகைக் கடை உரிமையாளர் ஒருவர் அவரது குடும்ப உறுப்பினர்கள் 9 பேருடன் ஜஸ்ரானா பகுதியில் உள்ள பதம் நகரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீரென அவரது வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 18 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.