Date:

நுவரெலியாவில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகை – பொதுமக்கள் ,சாரதிகள் கண்டனம்

நுவரெலியா இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்குகிறது , அதிகம் உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் வருகைத்தருகின்றன இருந்தும் நுவரெலியா பிரதான நகரில் நுவரெலியா பதுளை வீதியில் இரண்டு இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது.

நுவரெலியா தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தூர பிரதேசங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்குள் உள்ளே நிறுத்தப்படாமல் நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் பேருந்து நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது எனினும் இவ்விடத்தில் சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிங்கள மொழி தெரியாதவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக போக்குவரத்து பொலிஸாரினால் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாவதனால் சாரதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.

எனவே அரசின் மும்மொழிக் கொள்கைக்கு சம அந்தஸ்து வழங்கி மும்மொழிகளிலும் அறிவிப்பு பலகைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு பொது மக்கள் மற்றும் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளை மாளிகையின் கூரையின் மீதேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகையின் கூரையில் ஒரு அசாதாரண இடத்திலிருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி...

1,408 வைத்தியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பயிற்சி முடித்த 1,408 மருத்துவர்களை முதன்மை தர மருத்துவ அதிகாரிகளாக நியமிக்க...

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கோபா தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன,...