ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 35 – 40 ரூபாவினால் குறைக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நேற்றைய தின (24) நிலவரப்படி ஒரு கிலோ நெல் 101 ரூபாவாக குறைந்துள்ளது.
ஒன்றரை மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நெல், 125 ரூபாய்க்கு, மில்காரர்கள் கொள்முதல் செய்தனர். மில் உரிமையாளர்கள் அறுபத்து நான்கு கிலோகிராம் கொண்ட நெல் மூட்டையை எட்டாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த போதிலும், நேற்று (24) ஒரு நெல் மூட்டை ஆறாயிரத்து ஐநூறு ரூபாவுக்கு விற்பனையானது.