மஹிந்தானந்த அழுத்கமகே நேற்று இடம் பெற்ற சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை நீ ஒரு தீவிரவாதி…! என நேரடியாக தெரிவிதுள்ளார்.
நேற்றைய சபை அமர்வின் போது மஹிந்தானந்த அழுத்கமகே அவருடைய நேரத்தில் கருத்துக்களை தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
-” நான் ஒனக்கு தமுலால சொல்லவா? நீ LTTE காரன்… சாணக்கியனுடைய படையினருக்கு எதிராக போராடி 30 வருடத்திற்கு பின்னர் இந் நாட்டிக்கு சுகந்திரத்தை பெற்றுக்கொடுத்தனர்”
இதற்கு பதில் வழங்கிய சணக்கியன் “ மொட்டுக்கட்சியில் உள்ளவர்கள் தான் பணத்தை நிலத்தை கொள்ளை அடிப்பவர்கள் எங்களை பற்றி இவர்கள் ஒன்றும் கதைப்பது இல்லை என அந்த இராணுவ வீரர்கள் தன்னிடம் அங்களாக்கின்றனர்.” என்றார்.