எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“ஒரு பல்கலைக்கழக மாணவர் கூட தடுத்து வைக்கப்படவில்லை என்பதை நான் கல்வி அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
வசந்த முதலி 8-9 வருடங்கள் பல்கலைக்கழக மாணவராக இருக்கின்றார். இது மிகவும் முக்கியம்.
நான் 21 வயதில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினேன். ஆனால் வசந்த முதலிக்கு 31 வயதாகியும் அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரே.
ஒரு மாணவருக்கு ஒரு வருடம் மட்டுமே மேலதிகமாக கொடுக்க முடியும். அதன் பிறகு நீங்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.