Date:

பிரதேச சபை ஊழியர் வீதியில் வீழ்ந்து உயிரிழப்பு

கிளிநொச்சி பிரதேச சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது மதிக்கத்தக்க விஜயகுமார் என்ற வெளிக்களத் தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி நகரில் திருநகர் வீதியில் அரச நில அளவைத் திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுகாதாரத்தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு

பல பொருட்களின் இறக்குமதித் தடையை நீக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி...

மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் வெளிநாட்டு...

அனுரவுக்கு தடையுத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட...

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர்...