Date:

ஆசிரியர், அதிபர் சங்கங்கள் – அரசியல் கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்றைய தினம் சில அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது பிரச்சினைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு நேற்றைய தினம் கூடி கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தது.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களை தனித்தனியாக சந்திப்பதற்கு அமைச்சரவை உபக்குழு தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய ரிஷாட் பதியுதீன்!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை...

இலங்கை வரும் தளபதி!

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் உபேந்த்ரா த்விவேதி நாளை மறுதினம் இலங்கைக்கு...

FCID யில் முன்னிலையாகிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5)...

சர்ச்சைக்குரிய பாடத் தொகுதி தொடர்பான அறிக்கை சமர்பிப்பு

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module),...