Date:

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டு உரை இன்று நாடாளுமன்றில்!

2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று(14) நாடாளுமன்றில் நிகழ்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் பாதீட்டு உரை மீதான விவாதம் நாளை (15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

பின்னர் குழுநிலை விவாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை நடத்தப்படும்.

இது தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பாதீட்டில் 2023ஆம் ஆண்டுக்காக 7,885 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு பாதீட்டு மதிப்பீடு 29.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில் இவ்வாறு அதிக தொகை மதிப்பிடப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...

கட்டாரில் இருந்து நேரடியாக தேசிய அணியில் இணைந்து கொள்ளும் வியாஸ் காந்த்

பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில்...

புதிய பெற்றோலிய குழாய் வழித்தடத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் பெற்றோலியப்...

பேருவளை கடலில் மிதந்து வந்த 200 கிலோ பொதிகள் மீட்பு

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில்...