Date:

நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான 2023 வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 வரவுசெலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

2023 வரவு செலவுத் திட்டம், மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலன்கள், கட்டாயம் தேவைப்படும் மக்களுக்கு வழங்குவது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை பின்புலத்தை உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.

2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் மூலம் நவீன உலகிற்கு ஏற்ற நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...