Date:

Breaking : கொரோனா தொற்றால் பிரதான வைத்தியர் மரணம்

கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான பத்மசாந்த கொவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வைத்தியராவார்.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய அன்னாரின் இறுதிக் கிரியைகள் கண்டி, மஹாய்யாவ மயானத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதுவரை நாட்களும் கொரோனாவின் காரணமாக பெருமளவான பொதுமக்கள் உயிரிழந்து வந்த நிலையில் தற்போது வைத்தியரின் மரணம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...