ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பான ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினராக அனுஷன் கணேசலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான நியமனக்கடிதத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து பெற்றுக்கொள்வதையும் ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் தேசிய அமைப்பாளர் சமித் விஜேசுந்தர அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான அனுஷன் கணேசலிங்கம், கொழும்பு கொம்பனித்தெரு சைவ முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினரும், கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பான ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினரான அனுஷன் கணேசலிங்கம், கொழும்பில் வசிக்ககூடிய சிறிய மற்றும் நடுத்தர வருமானங்களை பெறக்கூடிய குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகின்றார் என்பதோடு, சிறந்த சமூக பணியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.