மக்களே அவதானமாக இருங்கள்

கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இன்று (21) அதிகாலை 5 மணி முதல் நாளை (22) அதிகாலை 5 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர மற்றும் கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், கண்டி மாவட்டத்தின் ஹதரலியத்த, தும்பனே, பஸ்பாகே கோரளை, கங்கவட்ட கோரளை பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மற்றும் கேகாலை மாவட்டத்தின் கடவத்த சத்தர, கலிகமுவ, ரம்புக்கண, அரநாயக்க ஆகிய பகுதிகளில் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு, நிலம் தாழிறங்குதல் மற்றும் நிலப்பரப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

புளூமெண்டல் எரிபொருள் களஞ்சிய முனையத்தில் டீசல் கசிவு!

ப்ளூமெண்டல் எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று காலை (21) முதல் டீசல் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே இருந்த வடிகால் அமைப்பின் வழியாகக் கசிந்த...

தலவத்துகொடவில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் திடீர் தீ விபத்து!

தலவத்துகொடவின் பொல்வத்த பகுதியில் இரும்புப் பொருட்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.       தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 6 வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை...