2027 வரவு – செலவு திட்ட உரை ஆரம்பம்

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை சற்றுமுன்னர் பாராளுமன்றில் ஆரம்பமானது.

 

 

 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை நிகழ்த்தி வருகின்றார்.

 

 

 

  • ‘வறுமையை ஒழித்தல், நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புதல், மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழித்தல், பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியனவே இந்த வரவு-செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.
  • மத்திய கிழக்குப் போர் எமது வலுசக்திச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அதற்காக நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க 147 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.

 

 

 

  • பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்வதுடன், கடந்த காலத்தைப் போன்று எதிர்காலச் சந்ததியினருக்கு இனிமேல் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படாதவாறு செயற்படுவதே எமது இலக்காகும்.

 

 

 

  • 2025 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கு (Current Account) வரலாற்றில் மிக உயர்ந்த அளவாக 1,719 மில்லியன் டொலர் மிகையைப் பதிவு செய்துள்ளது.

 

 

 

  • இந்த ஆண்டில் 9 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் (Remittances) எதிர்பார்க்கப்படுகின்றன.

 

 

 

  • 2022 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட கடன் அளவை 2025 ஆம் ஆண்டின் இறுதியாகும் போது 95% வரை குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

 

 

 

2022 ஆம் ஆண்டில் அரச வருமானத்தில் 79.1% வட்டி செலுத்துவதற்காகச் செலவிடப்பட்டது. 2025 ஆம் ஆண்டாகும் போது அதனை 45.9% வரையும், 2026 செப்டெம்பர் மாதமாகும் போது 39.6% வரையும் மேலும் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

 

 

 

2022 ஆம் ஆண்டில் 52 அரச தொழில்முயற்சிகளுக்காகப் பதிவாகியிருந்த 744.6 பில்லியன் ரூபாய் மொத்த வரிக்கு முந்திய தேறிய நட்டமானது, 2025 ஆம் ஆண்டில் 44.4 பில்லியன் ரூபாய் இலாபமாக மாற்றப்பட்டு, திறைசேரிக்கு இருந்த அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2026 ஆகஸ்ட் மாத இறுதியில் அரச நிறுவனங்கள் 367 பில்லியன் ரூபாய் வரிக்கு முந்திய இலாபத்தைப் பதிவு செய்துள்ளன.

 

 

2018 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மீண்டும் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட நாளிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையிலான அதன் மொத்த திரண்ட நட்டம் 528 பில்லியன் ரூபாவாகும். இது திறைசேரிக்குப் பாரிய சுமையாக மாறியுள்ள நிலையில், இதற்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

 

ஃபிட்ச் தரப்படுத்தல் (Fitch Ratings) நிறுவனத்தினால் இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தல் உயர்த்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் ஊழல் தொடர்பான தரப்படுத்தல்களில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.

 

 

 

 

 

உலகளாவிய அமைதிச் சுட்டெண்ணில் (Global Peace Index) இலங்கையின் நிலை முன்னேற்றமடைந்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் பல்வேறு துறைகளில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கான சான்றுகள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

 

 

ஏற்றுமதி போட்டித்தன்மை மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பலப்படுத்தப்படும்.

 

 

 

2027 ஆம் ஆண்டில் அரச முதலீடு மொத்த தேசிய உற்பத்தியில் 14 சதவீதமாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

அடுத்த வருடத்தில் மூலதன செலவுகளுக்காக ரூ. 2000 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

 

வரவு செலவு திட்டம் முன்மொழிவுகள்

 

நுண்நிதி முகாதை்துவ அதிகாரசபையொன்று 2027 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்படும்.

 

அரச – தனியார் பங்காண்மை சட்டமூலம் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டுவரப்படும். அத்துடன் முதலீட்டு பாதுகாப்பு சட்டமூலம் மீளாய்வுக்காக சட்டமா அதிபரிடம் முன்வைக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில்

அநுராதபுரம் - ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அங்கு இருதரப்பினருக்கு இடையில்...

ஜனாதிபதியை சந்தித்து நன்றி கூறிய அனோஜன் குடும்பத்தினர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜன் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காகத் தலையீடு செய்தமை தொடர்பில், அவரது குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர...