கடுகன்னாவ – கனேதென்னவிற்கும் இடையிலான வீதி நாளை காலை 6.00 மணி வரை மூடல்

கடுகன்னாவ வீதியில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்தமையினால், அவ்வீதியை நாளை (11) காலை 6.00 மணி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதன் காரணமாக அவ்வீதியிலான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

 

 

 

அதன்படி, இந்த வீதிக்குப் பதிலாகப் பிற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு கண்டி மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

 

 

 

இன்று (10) பிற்பகல் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தமை பதிவாகியிருந்தது.

 

 

 

நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதோடு, இந்த பாறைச் சரிவு காரணமாக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டது.

 

 

 

இதற்கமைய, நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையாகக் கடுகன்னாவைக்கும் கனேதென்னவிற்கும் இடைப்பட்ட வீதிப் பகுதியை மூடுவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நிஷாந்த ரணதுங்க கைது!

​தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணசிங்க, இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து எதிர்வுகூறல் – இலங்கைக்கு என்ன பாதிப்பு?

தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும் அதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல்...