நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் 100 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்

வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

 

 

குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

மேலும், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நிஷாந்த ரணதுங்க கைது!

​தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணசிங்க, இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து எதிர்வுகூறல் – இலங்கைக்கு என்ன பாதிப்பு?

தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும் அதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல்...