மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை – NSO அறிவிப்பு

2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

 

இன்று (05) நடைபெற்ற, 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பான பங்காளர்களின் கலந்தாலோசனை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

நீர்த்தேக்கங்களில் உள்ள தற்போதைய நீர்மட்டம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) வானிலை நிலவரங்களின் கீழ் கணிக்கப்பட்டதை விட அதிகமான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதிக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

முட்டை விலை அதிகரிப்பு

பண்டிகைக் கால நெருக்கக்கம் மற்றும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக சந்தையில் முட்டையின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.       தற்போது சந்தையில் ஒரு முட்டை 42...

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.     இந்த நிலநடுக்கமானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது.     இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில்...