அர்னாப் ’ அதி தீவிர புயல் ஆந்திரப் பிரதேச கரையை கடக்கிறது: இலங்கையில் நிலவிய தாக்கம் குறைகிறது

மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ‘அர்னாப்’ அதி தீவிர புயல், தற்போது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடந்து வருகின்றது.

 

 

 

இதன் காரணமாக, இலங்கை வானிலையில் குறித்த புயல் அமைப்பினால் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

 

 

 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

 

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

 

 

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

வீடு கட்டித் தருவதாகக் கூறி 3.8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி:...

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய...

நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

எயார்பஸ் (Airbus) வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,...