சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்கள்

2026/2027 ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

இதற்கமைய, செவிப்புலன் கருவிகளைப் (Cochlear Implants) பழுதுபார்ப்பதற்காக 75,000 ரூபாய் வரை அனுகூலங்களை வழங்குவதற்கும், நாட்பட்ட நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு 20,000 ரூபாய் வரை அனுகூலங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும், தோற் புற்றுநோயைக் கண்டறிதல் உள்ளிட்ட பெயரிடப்பட்ட சிறப்பு நோய் பரிசோதனைகளுக்காக 20,000 ரூபாய் வரை அனுகூலங்களை வழங்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 

தீவிர நோய்கள் பிரிவின் கீழ் அடங்கும் நன்மைகளும் விரிவாக்கப்பட்டுள்ளதோடு, புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பரிசோதனைகள், PET Scan பரிசோதனைகள் மற்றும் திடீர் விபத்துக்கள் காரணமாக மேற்கொள்ளப்படும் சில மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

 

தவிர, கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் கல்விக் சுற்றுலாக்கள், விளையாட்டு விழாக்கள் உள்ளிட்ட செயற்பாடுகளின் போது ஏற்படும் திடீர் விபத்துக்களினால் மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டால் 100,000 ரூபாய் நன்மையை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

2026 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் 2027 ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு அமைவாக இந்த புதிய அனுகூலங்களை உள்ளடக்கி சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

அரசுப் பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அனுகூலங்கள் கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தலைமுடி வளர்த்தால், பச்சை குத்தினால் தண்டனையா?

நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில்...

பொரளைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு – மாற்று வழிகள் அறிவிப்பு

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி கொழும்பு நகரத்திற்குள் நுழையும் ஒழுங்கில், அவசர வீதித் திருத்தப் பணி...