பிரஜா சக்தி வேலைத்திட்டத்திற்கு டிஜிட்டல் தரவு அமைப்பு

அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான வறுமையை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘பிரஜா சக்தி’ தேசிய வேலைத்திட்டத்திற்காக ஒருகிணைந்த டிஜிட்டல் தரவு அமைப்பொன்றை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

 

கிராமாபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நேற்று (13) அந்த அமைச்சின் வளாகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

 

பிரஜா சக்தி தேசிய செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்திப் பணியகம், கிராம அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

 

கிராமப்புற வறுமையை ஒழிக்கும் செயற்திட்டத்தில் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைக் கண்டறிவதற்குத் தேவையான தரவுகளை ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், கிராமப்புற அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்கு இந்தத் தரவு அமைப்பைப் பயன்படுத்தக்கூடிய முறைமைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை பெரிதும்...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து

இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை #சவூதி அரேபியாவின் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா...