முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு, திங்கட்கிழமை (12) காலை திடீர் மாரடைப்பு (இதய நோய்) பிரச்சினை காரணமாக கொழும்பிலுள்ள நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
தகவல்களின்படி, மஹிந்த ராஜபக்ச களுபோவிலை இல்லத்தில் இருந்தபோதே இந்த திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைக்காக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்போது, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிறப்பு மருத்துவர்கள் குழுவொன்று அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. கடந்த சில நாட்களாகவே அவர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவரது தற்போதைய உடல்நிலை குறித்த மேலதிகத் தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.


