வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை (13) குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

இது தொடர்பான எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்ளும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

இன்று (12) காலை 05.30 க்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

 

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும். இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர்) வீசுவதுடன் அந்தக் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

கைதான சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு விளக்கமறியல்

வாக்குமூலம்  வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவை எதிர்வரும் 23 ஆம்...