சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்

சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, அப்பகுதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகக் காரியாலயம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமது கைபேசிக்கு அவசர எச்சரிக்கை (National Warning Alert) கிடைத்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர நிலைகளின் போது அவசர சேவை இலக்கங்களாக மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்களில் 911 என்ற தொலைபேசி இலக்கத்தையும், ஏனைய பகுதிகளில் 998 என்ற தொலைபேசி இலக்கத்தையும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், துணைத் தூதரகக் காரியாலயத்தின் அவசரத் தொடர்பு இலக்கமான 056 098 6671 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல்...

சீ.வீ.கே.சிவஞானம், சுமந்திரன் உட்பட 5 தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும்...