சீ.வீ.கே.சிவஞானம், சுமந்திரன் உட்பட 5 தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த வருடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் விதிகளை மீறி நீக்கியமைக்கு எதிராக, தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியோருக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஊடாக இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இவ்வழக்கினை மாவட்ட நீதிபதி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துத் திகதியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

பொல்கொல்ல நீர்த்தேக்கத் திருத்தப் பணிகள்: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை பொல்கொல்ல...

ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும்...