லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.

அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

முதியவரைக் பலிகொண்ட பாதாள உலகப் பகை!

பொரலஸ்கமுவை, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு...

தேநீர் மற்றும் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை...