கெஹலிய கைது; அகிலவுக்குப் பிணை

விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வழக்கில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுல் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் இருவரும் கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரகமவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்படுமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், சந்தேகநபர்கள் இருவருக்கும் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்தது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளும் சந்தேகநபர்கள் தரப்புச் சட்டத்தரணிகளும் சமர்ப்பித்த வாதங்களைக் பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!

ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு...