புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அஸ்வர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் I.A. Najeem அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அதி திபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டினர்.
நிகழ்வின் சிறப்பு வளவாளராகக் கலந்து கொண்ட அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸ் நிறுவனர் இல்ஹாம் மரிக்கர் , மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பில் பயனுள்ள ஆலோசனைகளையும் ஊக்கமளிக்கும் கருத்துக்களையும் வழங்கினார்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டமை, அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்ததுடன், எதிர்காலத்தில் மேலும் சிறப்பாகச் செயற்படுவதற்கான ஊக்கத்தையும் வழங்கியது.
மாணவர்களின் திறமைகள் மற்றும் கல்வி அடைவுகளை ஊக்குவிக்கும் இத்தகைய நிகழ்வுகள், அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்கவும் துணைபுரிகின்றன.
தரம் 11 மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டி, அவர்களின் எதிர்கால வெற்றிக்கான பயணத்திற்கு உற்சாகம் அளித்த சிறப்பான நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.


