பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு – பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தன்னுடைய ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு. பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள், பல தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

இணையற்ற கருணையுடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் அவர் தனது குரல்வளம் மூலம் வெளிப்படுத்தினார். அவரது இனிமையான பாடல்கள் வரும் காலங்களிலும் கேட்போரை மயக்க வைக்கும்.

துயரமான இந்தத் தருணத்தில், அவரது குடும்பத்தினர், எண்ணற்ற இரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைச் சமூகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில்...

பிரபல நடிகர் நானா படேகர் திடீர் மரணம்!

பிரபல பொலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக தமது 75 ஆவது வயதில் இன்று (08) காலமானார்.   கோவாவில் உள்ள தனது வீட்டில்...