ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச கைது செய்யப்பட்டுள்ளார் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜகிரிய மேம்பாலத்துக்கு அருகில், உமாரியா பயணித்த காரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






